பிரதான் மந்திரி பிரதான் மந்திரி ஜன் ஔஷதி.. பிரதமரின் "மக்கள் மருந்தகம்" சூப்பர் முடிவு.. மக்கள் குஷி
டெல்லி: மத்திய அரசு பொதுமக்களின் நன்மைக்காக அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளது. இதைக்கேட்டு ரயில்வே பயணிகள் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.. இதில் ஒன்றுதான், கடந்த 2015ல் தொடங்கப்பட்ட பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டமாகும்.

மக்கள் மருந்தகங்கள்: இந்த மக்கள் மருந்தகங்கள், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன், செயல்படுத்தப்பட்டுள்ளதுதான் இந்த மக்கள் மருந்தகம்.
இந்த மருந்தகங்களில் 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள், ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின்கள், 250 அறுவை சிகிச்சை சாதனங்கள் என அனைத்துமே மலிவு விலையில் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன..
மருந்து கடைகள்: இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8735 ஆக உயர்ந்துள்ளது.. எப்படியும் வரும் ஆண்டிற்குள் அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மக்கள் மருந்தகங்களில் அதிகபட்சமாக ரூ.100 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகியிருக்கின்றன. இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பணமும் மிச்சமாகியுள்ளது.
முதன்முதலில், இந்த மருந்தகங்களின் ஆண்டு வருவாய் ரூ.8 கோடியில் ஆரம்பித்து, இன்று மாத வருவாய் ரூ.100 கோடியை வரைக்கும் எட்டியிருக்கிறது.. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதுகூட, ரூ.83.7 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகியுள்ளன.
ஊக்கத்தொகை: இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது... பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் மருந்தகம், அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.. இந்த மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வரும்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இந்த மக்கள் மருந்தகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.. இதற்காக, முதற்கட்டமாக சுமார் 50 ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு உதவும் விதமாக, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இந்த திட்டம் மற்ற ரயில் நிலையங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருத்த நம்பிக்கை: ஏற்கனவே, ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறையை சார்பில், டிக்கெட் முன்பதிவு, ரயிலில் படுக்கை வசதி, உணவு, தண்ணீர், கழிப்பறை, ஓய்வறை என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ள நிலையில், மருந்துகளும் எளிய முறையில் கிடைத்தால் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது..
அதாவது, வெளிச்சந்தையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் மருந்துகள், இந்த மக்கள் மருந்தகத்தில் ரூ. 400 முதல் 500 க்கு மட்டுமே விற்கப்படுகிறது.. அந்தவகையில், மத்திய அரசின் முடிவு ரயில்வே பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications