டெல்லி லோதி மயானத்தில்.. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் தகனம்.. அஞ்சலி!
டெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். மூளை குழாயில் அடைப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இவருக்கு ஏற்பட்டது.

மூளை குழாயில் அடைப்பை நீக்கிய பின்பும் கூட, நுரையீரல் தொற்றை இவருக்கு சரி செய்ய முடியவில்லை. இதனால் இவர் உடல் நலிவடைந்து கொண்டே சென்றது. டெல்லியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் இவருக்கு 21 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் உடல் நேற்று இரவு டெல்லியில் 10 ராஜாஜி மார்க் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பிரணாப் முகர்ஜி உடலுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரணாப் முகர்ஜி உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் இவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
பொது மக்களும் வரிசையாக வந்து இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.இதையடுத்து டெல்லியில் பிரணாப் முகர்ஜி உடல் எரியூட்டப்பட்டது. டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி இறுதி சடங்கை செய்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications