இல.கணேசன் மறைவால்.. மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
டெல்லி: நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 15) மாலை காலமானார்.
மறைந்த இல.கணேசனின் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின், சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் இன்று (ஆகஸ்ட் 16) தகனம் செய்யப்பட்டது.
நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பைக் கவனிக்க குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
"நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை, கூடுதலாக, நாகாலாந்து ஆளுநரின் பணிகளைச் செய்ய நியமித்துள்ளார்" என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications