இந்தியா-ரஷ்யா உறவில் புதிய தொடக்கம்! டெல்லி வந்தார் புதின்.. பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு!
டெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக, ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வந்துள்ளார். அவருக்கு அரசு தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று புதினை வரவேற்றிருக்கிறார்.
ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டு வந்த எரிபொருள் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்று மாலை 4:30 மணிக்கு புதின் டெல்லி வருவார் என்று பார்க்கப்பட்ட நிலையில் இரவு 7 மணி அளவில் டெல்லி வந்து இறங்கி உள்ளார் அதிபர் புதின். புதினை வரவேற்க விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் நாளை காலை பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன் பின்னர் இரு தலைவர்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்கு பின்னர் ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய சேனலை புதின் தொடங்கி வைக்கிறார் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினிக்கு விருந்து அளித்து கௌரவிக்க உள்ளார்.
ஆப்பரேஷன் சிந்து நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஆளில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழித்ததில் ரஷ்யாவில் எஸ் 400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. எனவே இதை கூடுதலாக கொள்முதல் செய்வது குறித்தும் இந்த பயணத்தின் போது இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல அமெரிக்கா அழுத்தம் காரணமாக, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்து இருக்கிறது. இது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் இன்னும் சொல்லப்படுகிறது. 28 மணி நேர இந்திய பயணத்தை நிறைவு செய்து வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் ரஷ்யா புறப்படுகிறார்.
4 ஆண்டுகளு்ககு பிறகு புதின் இந்தியா வந்திருக்கிறார். உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா உடனான உரசல் காரணமாக, புதினுக்கு சர்வதேச அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் இருக்கிறது. எனவே டெல்லி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications