எக்ஸ் தள பக்கத்தில் டிபியை மாற்றிய பிரதமர் மோடி.. வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தல்
டெல்லி: இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது புகைப்படத்தை நீக்கிவிட்டு, தேசியக் கொடியை பிரதமர் வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாட்டு மக்கள் மத்தியில் பிரமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். சுதந்திர தின பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளம், இன்ஸ்டா, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தனது முகப்பு படத்தை மாற்றி தேசியக் கொடியை டிபியாக வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது முகப்புப் படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. எனவே, ஹர் கர் திரங்கா என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் எனது முகப்புப் படத்தை மாற்றுகிறேன். இதன் மூலம் நமது தேசியக் கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் செல்ஃபிக்களை https://harghartiranga.com இல் பகிருங்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹர் கர் திரங்கா..என்பது அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி என்பதாகும். ஆசாதி கா அம்ரித் மாஹோத்சவ்.. என்பது சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம். இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையிலும் ஊக்குவிக்கும் ஒரு பிரசாரம் ஆகும். எனவே, இந்த ஆண்டும் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications