பிரதமர் நரேந்திர மோடிக்கு கேதர்நாத்தில் தீபாவளியாம்... டெல்லி வட்டாரங்கள் தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு கேதர்நாத்தில் தீபாவளி கொண்டாட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத்தில் உள்ள சார் தாம் நகரில் கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Primeminister NArendra Modi to celebrate Diwali at Kedarnath this year

ஒவ்வொரு ஆண்டும் திபாவளிப் பண்டிகையை எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நரேந்திர மோடி. அதன்படி இந்த ஆண்டு 2013ல் பேரிடர் பாதித்த கேதர்நாத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நின்று தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களுடன் கொண்டாட மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளம் பாதித்த இந்தப் பகுதியில் கட்டமைப்பு பணிகள் 2014ல் தொடங்கியது. தற்போது சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமரின் இந்தப் பயணம் இந்துக்கள் அதிகம் சென்று வழிபடும் கேதர்நாத் கோவிலின் கவனத்தை மேலும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காஷ்மீரின் பந்திரா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக மோடி தீபாவளியை கொண்டாடினார்.

2016ல் நரேந்திர மோடி இந்திய - சீன எல்லையான இமாச்சல பிரதேச குக்கிராம மக்களை சந்தித்தார். 2015ல் அமிர்தசரசில் உள்ள ராணுவ படை வீரர்களுடன் மோடி தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில் இந்த ஆண்டு பிரதமர் கேதர்நாத்தில் தீபாவளி கொண்டாடுவார் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+