அவர் பயன்படுத்தியது.. காங்கிரஸ் அலுவலகத்தில் பிரியங்காவிற்கு அறை ரெடி.. என்ன ஸ்பெஷல் தெரியுமா!
தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இதனால் புதிய பலம் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இவரின் அரசியல் வருகையை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரியங்கா முழுதாக அரசியலில் இறங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

முழுதாக அரசியல்
தற்போது பிரியங்கா காந்தி அமெரிக்காவில் இருக்கிறார். வரும் திங்கள் கிழமை அவர் காங்கிரஸ் அலுவலகம் வர உள்ளார். அதன்பின் உத்தர பிரதேசத்தில் கும்ப மேளாவில் தரிசனம் செய்துவிட்டு, கங்கையில் நீராடிவிட்டு பின் தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறார்.

புதிய அறை அளித்துள்ளனர்
தற்போது பிரியங்கா காந்திக்கு டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறை பிரியங்கா காந்திக்கு இப்படி அறை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியின் அறைக்கு அருகிலேயே இவருக்கு அறை அளிக்கப்பட்டு உள்ளது.

யார் இடம்
இந்த இடத்தில் இதற்கு முன் தங்கி இருந்தது வேறு யாரும் இல்லை, அது ராகுல் காந்திதான். 2016ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அதுவரை அவர் இந்த அறையைத்தான் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பொலிவு
காங்கிரஸ் தலைமை அலுவலகம் நேரு பவன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்காவின் வரவை அடுத்து மொத்த அலுவலகமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. திங்கள் கிழமை அவர் அலுவலகம் வருவதை காங்கிரஸ் கட்சியினர் பெரிய விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் என்கிறார்கள்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications