டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதியை பாகிஸ்தான் மீடியாக்கள் ஏதோ சுதந்திர போராட்ட வீரராக சித்தரித்து வருவது இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் கான்வாய் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் 350 கிலோ வெடி பொருட்களுடன் வந்த காரை கொண்டு ராணுவ கான்வாயை மோதினார்.

இதில் வெடிப் பொருட்கள் வெடித்து சிதறியதில் 40 வீரர்கள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் நாடே கொதித்து போயுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் மீடியாக்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்னொரு செய்தி

பாகிஸ்தானின் தினசரி பத்திரிகையான தி நேஷன் என்ற பத்திரிகையில் சுதந்திர போராட்ட வீரர் நடத்திய தாக்குதல் ("Freedom fighrter launches attack") என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இன்னொரு செய்தியும் வெளியானது.

 இன்னொரு செய்தி

இன்னொரு செய்தி

பாகிஸ்தானின் தினசரி பத்திரிகையான தி நேஷன் என்ற பத்திரிகையில் சுதந்திர போராட்ட வீரர் நடத்திய தாக்குதல் ("Freedom fighrter launches attack") என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இன்னொரு செய்தியும் வெளியானது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஸ்ரீநகரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சார்பில் வெளியான அறிக்கையில் தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என்றும் வெடிப் பொருட்களை வெடிக்க செய்த நபரின் பெயர், போட்டோ, வீடியோவையும் வெளியிட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் மீடியா வெளியிட்டுள்ள செய்தி முரண்பாடாக உள்ளது.

 பொய்யான தகவல்

பொய்யான தகவல்

இந்தியாவுடன் நல்லுறவு பேண வேண்டும் என பாகிஸ்தான் அரசு கூறினால், அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தொடர்ந்து நஞ்சை கக்கி வருவதும் பாதுகாப்பு படையினர் குறித்து பொய்யான தகவலை பரப்புவதும் தொடர்ந்து வருகிறது.

English summary
Pakistan Media calls Pulwama Perpetrator a freedom fighter country's media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X