வேலை வாய்ப்பு இடஒதுக்கீட்டில் முறைகேடு... ஓஎன்ஜிசிக்கு ஷோ காஸ் நோட்டீஸ்!!
டெல்லி: இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து இருப்பதாக மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு (ஓஎன்ஜிசி) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஓஎன்ஜிசிக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் நோட்டீஸ் அனுப்பி, இதன் மறுஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, முறைகேட்டை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. என்.சி.சி.சி தொகுத்த தகவலின்படி, ஓ.என்.ஜி.சி 1993 முதல் இடஒதுக்கீட்டின்படி ஊழியர்களை நியமிக்கவில்லை. மேலும், ஆட்சேபித்த ஓபிசி வகுப்பு ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மீண்டும் அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை ஓஎன்ஜிசி பொதுத்துறை நிறுவனம் வரும் திங்கள் கிழமை அளிக்கும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறுதியாக வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை 11.30 மணிக்கு கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசியை இறுதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஆஜராகவில்லை என்றால் உங்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றும் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்துவதில் கடுமையான முறைகேடுகள் ஓஎன்ஜிசியில் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது என்று தேசியக் கமிஷன் தெரிவித்துள்ளது.
அனைத்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. 1993 ஆம் ஆண்டில் ஓஎன்ஜிசியில் வெறும் 11 ஓபிசி வகுப்பினருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடம் 286. அந்த ஆண்டில் மட்டும் சட்டப்படி 77 ஓபிசி வகுப்பினருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். 1994 ஆண்டில் 99 காலியிடம் இருந்துள்ளது. ஆனால், எட்டு ஓபிசி வகுப்பினருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி 26 பேருக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். இந்த நிலைமை 1993 முதல் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை நடந்து வந்துள்ளது.
ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications