ரபேல் டீல்… பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.. மாயாவதி வலியுறுத்தல்
டெல்லி: தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ரபேல் பேர ஊழலை மறைக்க , மோடி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம். சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதுகுறித்து, அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் பாஜக அரசு மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நாட்டை தவறாக வழி நடத்திய மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்த மாயாவதி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் மோடிஜி நீங்கள் முடிந்த அளவுக்கு பொய் சொல்லலாம். ஆனால், உண்மை தாமதமானாலும் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.
மேலும், ரபேல் ஊழலில் ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதுக்கு மேல் மறைத்து வைப்பதற்கு ரகசியங்கள் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். மோடிஜி கவலைப்படாதீர்கள், நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் விசாரணை நடக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications