யுபிஎஸ்சி மூலம் தலித், பழங்குடிகள், ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்துவிட்ட மோடி.. ராகுல் அட்டாக்
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, அரசு அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்கிறது; இதன் மூலம் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்துவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். யுபிஎஸ்சியானது இடஒதுக்கீடுகளே இல்லாமல் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
யுபிஎஸ்சி வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இப்போது பெரும் கொந்தளிப்புக்கு காரணமாகி உள்ளது. அதாவது 0 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் , துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனங்களாகும். இதில் இடஒதுக்கீடு எதுவும் இல்லை. இதனால் தலித், பழங்குடிகள், ஓபிசி வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 22 அல்லது 23 இடங்கள் பறிபோய்விட்டது. இதற்கு எதிராக திமுக, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மத்திய அரசின் அமைச்சக அதிகாரிகளை யுபிஎஸ்சி நேரடியாக நியமனம் செய்கிறது. இத்தகைய நேரடி நியமனங்கள் மூலமாக தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்துவிட்டார். அரசின் உயர் பதவிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் இடம்பெறவில்லை என எப்போதும் கூறி வருகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கான உரிமையையே பிரதமர் மோடி பறித்துவிட்டார். அரசியல் சாசனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் இது. யுபிஎஸ்சிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். மூலம் அதிகாரிகளை மோடி நியமிக்கிறார். "இந்தியா" இதனை கடுமையாக எதிர்க்கிறது.
செபி உள்ளிட்ட அரசு பதவிகளில் சில கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் அமர வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். தனியார் துறையில் இருந்து ஒருவரை செபியின் தலைவராக்கியிருப்பது முதல் முறை. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தை தனியார்மயமாக்கி இடஒதுக்கீட்டு முறையை பிரதமர் மோடி ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications