2 ஆண்டு தண்டனை: ராகுல் அப்பீல் மனு மீது நாளை விசாரணை.. விசாரிக்கும் அமர்வை அறிவித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. ராகுல் அப்பீல் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார். அப்போது மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை அவமதித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்தது.

அதன்பிறகு கோடை விடுமுறைக்கு பிறகு இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை 7ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்று தெரிவித்தது.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை சூரத் செசன்ஸ் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி வழக்கை விசாரிக்கும் அமர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications