ராகுல் தொடர்ந்து அவதூறு செய்கிறார்..போலீசில் புகார் செய்ய உள்ளேன்..குறுக்கே வந்த சாவர்க்கரின் பேரன்
டெல்லி: சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி சாவர்க்கரை அவமதித்து வருகிறது . ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்ய உள்ளேன் என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி பற்றி பேசியது சர்ச்சையானது.
கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசியது தொடட்ர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.

ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு
இதில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மறுநாளே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீதான அடுத்தடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் அறப்போராட்டத்தை நடத்தியது. அதுபோக நாடாளுமன்றத்திலும் இன்று இந்த விவகாரம் எதிரொலித்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
இதற்கிடையே நேற்று முன் தினம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றும் மன்னிப்பு கேட்க எனது பெயர் சாவர்க்கர் இல்லை என்றும் நான் காந்தி எனவும் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக விவாதப்பொருளாகியுள்ளது.

மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று
ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு சாவர்க்கரின் பேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராகுல் காந்தி நான் சாவர்க்கர் இல்லை மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டுமாறு நான் ராகுல் காந்திக்கு சவால் விடுக்கிறேன்.

2 முறை மன்னிப்பு கேட்டுள்ளார்
ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் 2 முறை மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராகுல் தொடர்ந்து என் தாத்தாவை(சவார்க்கரை) அவமதித்து பேசிக் கொண்டு இருக்கிறார். சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி சாவர்க்கரை அவமதித்து வருகிறது . ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்ய உள்ளேன்" என்றார்.

அவமரியாதை செய்வது
முன்னதாக ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசியதற்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறுகையில், சாவர்க்கர் எங்களின் கடவுள் போன்றவர் என்றும் அவரை இழிவுபடுத்தக் கூடாது. சாவர்க்கர் குறித்து தொடர்ந்து அவமரியாதை செய்வது கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும். அந்தமான் சிறையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இன்னல்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் எதிர்கொண்டார்" என்றார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications