வன்முறையால் எரியும் மணிப்பூர்.. விரைகிறார் ராகுல் காந்தி.. 2 நாள் பயணம்! மக்களுடன் உரையாட திட்டம்!
டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29ஆம் தேதி செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
Recommended Video
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. சுமார் 120 பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மைதேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் ஏராளமானோரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளள்னர். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓய்ந்ந்தபாடில்லை.

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக அரசும் மௌனம் சாதிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. பைரேன் சிங் செயல்படாத முதல்வராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்குச் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களுடன் உரையாடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் சுமார் இரண்டு மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, இந்த சமூக மோதலில் இருந்து அமைதிக்கு செல்ல ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனிதாபிமான சோகம், வெறுப்பு அல்ல, அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது,. அப்போது பல எதிர்க்கட்சிகள் மணிப்பூருக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.
ஆனாலும் பாஜக அரசு இதுகுறித்து உறுதியளிக்கவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications