துவங்கியது பயணம்.. அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்.. கவனிக்கும் பாஜக
டெல்லி: ஒருவார கால பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்ற இருக்கிறார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் சமீபத்தில்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பிரிட்டன் பயணத்தின்போது ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதனை பாஜக பெரும் பிரச்னையாக மாற்றியது.

ராகுல் காந்தி வெளிநாட்டில் நமது நாட்டின் ஜனநாயகத்தை விமர்சித்துவிட்டார் என்று பாஜக கடுமையாக குற்றம்சாட்டியது. மட்டுமல்லாது அந்த நேரத்தில் அதானி விவகாரம் பெரியதாக வெடித்திருந்ததால் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தது. ஆனால் பாஜக இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதேபோல இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க முயன்றபோது நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். அப்போதிலிருந்து ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அடுத்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
அங்கு நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுடனும் உரையாடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்!











Click it and Unblock the Notifications