சிறுபிள்ளைத்தனமான சேட்டை! பள்ளி மாணவர் பிறரை குற்றம் சொல்வது போல.. ராகுலை கேலி செய்த மோடி
டெல்லி: லோக்சபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேற்று பள்ளி மாணவரை குறை சொல்வது போல ஒருவர் சிறுபிள்ளைத்தனமான சேட்டை செய்தார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது என்றும் கூறினார்.
லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக எதிர்க்கட்சிகள் அமளிகளுக்கிடையே மோடி உரையாற்றினார். அப்போது மோடி, நேற்று பள்ளி மாணவரை குறை சொல்வது போல ஒருவர் சிறுபிள்ளை தனமான சேட்டை செய்தார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

மோடி கூறியதாவது:- லோக்சபாவில் சிறுபிள்ளைத்தனமான சேட்டையை நாம் பார்த்தோம். பள்ளி மாணவர் பிறரை குற்றம் சாட்டுவது போல பேசினார்கள். (ராகுல் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசினார்) ராகுல் காந்தி நேற்று நடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். குறைந்தபட்ச ஆதார விலை, அக்னி வீர் திட்டம் குறித்து ராகுல் பொய்யான தகவல் கூறினார்.
நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழி நடத்துகிறது. மாதம் ரூ.8,500 வழங்குவதாக பொய்யை கூறியது காங்கிரஸ் கட்சி. பொய்யே காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும். ரஃபேல் குறித்தும், ஹெச்.ஏஎல் குறித்தும் ராகுல் காந்தி பொய் கூறினார். பொய்யின் பாதையில் மக்களை அழைத்து சென்று நாடாளுமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. எதிர்பார்த்த முடிவு வராததால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என அராஜகத்தை பரப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எமர்ஜென்சி மூலம் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. அவசர நிலையின் போது ஊடகங்கள் முடக்கப்பட்டு, அரசியல் சாசனம் ஒடுக்கப்பட்டது. நேருவின் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் விலகினார் என்று கூற முடியுமா?..
ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது. காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியதை மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டார். இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த சதி நடைபெறுகிறது. இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசுவது தான் உங்கள் கலாச்சாரமா?.. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம் தான். இந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் மிகவும் கொடூரமானது. அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை அவமதித்து, கேலி செய்கிறது காங்கிரஸ் கட்சி. வாக்கு வங்கி அரசியல் தொடர்பான நடவடிக்கைகள் சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications