இத்தாலி போயிட்டு வந்த ராகுல் காந்தியை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம்.. பாஜக தலைவர்
டெல்லி: ராகுல் காந்தி இத்தாலியில் இருந்து ஆறு நாட்களுக்கு முன்பு தான் வந்திருப்பதால் அவர் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால் ராகுலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்பி ரமேஷ் பிதுரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக சீனாவில் 2,981 பேர் இறந்துள்ளனர்.இத்தாலியில் புதிய கொரோனா வைரஸ் காரணமாக எழுபத்தொன்பது பேர் இறந்துள்ளனர், கடந்த மாதத்தில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது- இதில் 14 பேர் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர். இந்நிலையில் இத்தாலி உள்பட 12 நாடுகளைச் சேர்நத்வர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய அரசு இப்போது தடை விதித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு தான்இந்தியா திரும்பினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, ராகுல் காந்தி ஆறு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து திரும்பினார், எனவே அவரை கொரோனா வைரஸ் பரிசோதிக்க வேண்டும். ராகுல் காந்தியுடன் அமர்ந்திருக்கும் எம்.பி.க்களும் வைரஸ் தாக்கக்கூடும். இத்தாலியைச் சேர்ந்த பலர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். எனவே அவர் தன்னை பரிசோதித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
முன்னதா நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி,. "முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ... முதலில் நீங்கள் மக்களை ஏஏ விவாகரத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் இந்த பக்கமாகவோ அல்லது மற்றவர்களாகவோ இருக்க வேண்டும் என்று உங்கள் தாய் சொன்னார் ... நீங்கள் ஒற்றுமையைக் காட்டச் செல்வதற்கு பதில் வன்முறையைத் தூண்டுகிறீர்கள். உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஆறு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து வந்திருக்கிறீர்கள், விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் சோதனை செய்துள்ளீர்களா? நீங்கள் முன்னெச்சரிக்கைகள் எடுத்தீர்களா அல்லது அதை (கொரோனா வைரஸ்) பரப்ப விரும்புகிறீர்களா? " என்று கூறியிருந்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications