Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வினோதமான தீர்ப்பு'.. ராகுல் காந்தி எம்பி பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. கபில் சிபல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அந்தத் தண்டனையே வினோதமானது என்றும் சட்டநிபுணரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி கூறிய கருத்துக்காக குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவருக்கு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் தண்டனை அவரை லோக்சபாவில் இருந்து தடுக்குமா என்ற ஊகங்கள் நேற்று நாள் முழுவதும் எழுந்தன.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகி தனி கட்சி தொடங்கியவரும், நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல் கூறுகையில், " நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் போதாது. தண்டனைக்கு இடைக்கால தடை அல்லது தண்டனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அப்படி தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் (ராகுல் காந்தி) நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியும்" என கபில் சிபல் பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவியிடம் கூறினார்.

என்ன தண்டனை

என்ன தண்டனை

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "எந்தவொரு குற்றத்திலும் ஒருவர் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், அந்த இடம் காலியாக இருக்கும் என்று சட்டம் கூறுகிறது. எனவே சட்டத்தின்படி அதுதான் சரி. இயற்கையாகவே சபாநாயகர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவார். ஏனெனில்

லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் 2013-ல் உச்ச நீதிமன்றம், "குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.க்கு உடனடியாக அவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்" என்று தீர்ப்பளித்தது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அந்த வழக்கில் தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐ நீதிமன்றம் ரத்து செய்தது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்களுக்கு அனுமதித்தது, இது "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே ராகுல் காந்தி எம்பி பதவி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் வினோதமானது" இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

பதிலடி

பதிலடி

ராகுல் காந்தியின் கருத்து ஒரு சாதி மற்றும் சமூகத்திற்கு எதிரானது என்ற பாஜக சொல்கிறதே அதற்கு உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர் கபில் சிபலிடம் கேட்டார். அதற்கு அவர், "என்னது சாதிக்கு எதிரானதா? இல்லை.. அவர்கள் (பாஜகவினர்) எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு தனிநபருக்கே எதிரானது என்பதே என் கருத்து" என்று பதிலடி கொடுத்தார்.

ஏன் தண்டனை

ஏன் தண்டனை

சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது.

20 நிமிட விசாரணை

20 நிமிட விசாரணை

தப்பியோடிய தொழிலதிபர்களான நீரவ் மோடி மற்றும் லலித் மோடி ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொள்ளும் கடைசிப் பெயரைப் பற்றி பிரதமர் மோடியைக் குறிவைத்து,எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான குடும்பப்பெயர் எப்படி வந்தது?" என்று ராகுல் காந்தி கூறியதே இந்த தீர்ப்புக்கு காரணமாக அமைந்தது.பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில் தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. வெறும் 20 நிமிட விசாரணைக்குப் பிறகு எப்படி நீதிமன்றம் இவ்வளவு கடுமையான தண்டனையை வழங்க முடியும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+