ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கடந்த ஞாயிறு அன்று உடல் நலக்குறைவால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் டெல்லி திரும்பி இருந்தார் ராகுல்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) நடக்கிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிமை தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை (26ஆம் தேதி) இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் இந்த 89 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லிக்கு திரும்பினார்.
பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார். தான் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தியால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்க முடியவில்லை. இன்று பிரியங்கா காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார்.
தற்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உடல் நலம் தேறி இருப்பதால், இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உடல்நலம் தேறி வருவதால், அவர் இன்று முதல் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அமராவதியில் பகல் 12.30 மணிக்கும், சோலாபூரில் பிற்பகல் 3.30 மணிக்கும் பொதுகூட்டங்களில் பங்கேற்கிறார்" என்று எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications