போலி வாக்காளர்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டை.. கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்! மொத்தமாக புறக்கணிப்பு
டெல்லி: வட இந்தியாவைச் சேர்ந்த தேசிய ஊடகங்கள் பலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் எழுப்பிய "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டை சரியாக செய்தியாக வெளியிடவில்லை அல்லது பெரும்பாலும் அது தொடர்பான செய்திகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்த வாக்கு விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிடப்பட்ட சில செய்தி ஊடகங்களில் கூட, அது பெரும்பாலும் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. வழக்கமாக, அத்தகைய இடங்களில் அன்றைய மிக முக்கியமான அரசியல் செய்திகளே இடம்பெறும்.

ராகுல் காந்தி வாக்காளர் சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் தாராக வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
தேர்தல் ஆணைய முறைகேடு - ராகுல் காந்தி
அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்?
ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது.
இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம். தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி.
தேர்தல் முறைகேடு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
போலி முகவரிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று இல்லாத முகவரியில் இருப்போர்.. நீங்கள் அங்குத் தேடிச் சென்றால் அதுபோல எந்தவொரு முகவரியும் இருக்காது. மற்றொன்று, வீடு எண் 0, தெரு எண் 0 போன்ற செல்லாத முகவரிகள். இறுதியாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகள் இருக்கும். இத்தகைய போலி முகவரிகள் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000க்கும் மேல் இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.
இந்தியா மீதான தாக்குதல்
அவர் முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்ததுடன், இதை இந்தியாவின் ஜனநாயகத்திற்கு நேரடி அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டார். இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் வந்தன, ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. முக்கியமாக இன்ஸ்டாகிராமில் வடஇந்தியா முழுக்க கடுமையாக டிரெண்ட் ஆனது.
ராகுல் காந்தியை புறக்கணித்த தேசிய ஊடகங்கள்
பல்வேறு மாநில ஊடகங்கள், இன்ஸ்டாகிராம் செய்தி பக்கங்கள், இணையதளங்கள் இந்த விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தாலும், பல தேசிய ஊடகங்கள் இதை பெரிதாக கவரேஜ் செய்யவில்லை.
ராகுல் காந்தியின் இந்த வாக்கு விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிடப்பட்ட சில செய்தி ஊடகங்களில் கூட, அது பெரும்பாலும் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. வழக்கமாக, அத்தகைய இடங்களில் அன்றைய மிக முக்கியமான அரசியல் செய்திகளே இடம்பெறும். ஆனால் ராகுல் காந்தி செய்தி வெளியிடப்படவில்லை.
டிரம்பிற்கு முக்கியத்துவம்
இதன் காரணமாகவே வட இந்தியாவைச் சேர்ந்த தேசிய ஊடகங்கள் பலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் எழுப்பிய "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டை சரியாக செய்தியாக வெளியிடவில்லை அல்லது பெரும்பாலும் அது தொடர்பான செய்திகளை புறக்கணித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாறாக, இந்த ஊடகங்களில் பலவற்றின் முதன்மைச் செய்திகள் அமெரிக்க அரசியலுக்கு, குறிப்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய வரிக் கொள்கை அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ட்ரம்பின் செய்திக்கு சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் இருந்தாலும், ஒரு முக்கிய உள்நாட்டு அரசியல் குற்றச்சாட்டை விட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைக்கு முன்னுரிமை அளித்த இந்த முடிவை ஊடக விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய செய்திகள் பெரும்பாலும் குறைவான கவரேஜைப் பெறுகின்றன என்றும் இதன் காரணமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications