மோடி, முதல் அமித்ஷா வரை.. ராகுல் காந்தி பேசும் போது 50 முறை குறுக்கிட்ட பாஜக அமைச்சர்கள் யார் யார்?
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று லோக்சபாவில் பேசிக்கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி முதல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அமைச்சர்கள் இடைமறித்தனர். மொத்தம் 50 முறை ராகுல் காந்தியின் பேச்சின் போது பாஜக அமைச்சர்கள் குறுக்கிட்டதாக கூறப்பபடுகிறது. அதனை இப்போது பார்ப்போம்.
லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசும் போது, பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். நீட் தேர்வு முதல் மணிப்பூர் விவகாரம் வரையிலும் ராகுல் காந்தி விமர்சித்தார்,

ராகுல்காந்தி இன்று பேசிய ஒரு விஷயம்.. பாஜகவினரை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது. ராகுல் காந்தி அப்படி என்ன பேசினார். "இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்" என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி பேசும் போதே இடைமறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று காட்டமாக கூறினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்திக்கு எழுந்து நின்று கடுமையான பதிலடி கொடுத்தார்.
அமித் ஷா பேசுகையில் "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி முதல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அமைச்சர்கள் இடைமறித்தனர். மொத்தம் 50 முறைக்கு மேல் ராகுல் காந்தியின் பேச்சு இடைமறித்துள்ளனர். அதனை இப்போது பார்ப்போம். பிரதமர் மோடி இரண்டு முறையும் , உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு முறையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு முறையும் இடைமறித்தாக சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கிறார்கள்
இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரண் ராஜூ ஆறு முறையும், சிவராஜ் சிங் சௌகான் 3 முறையும், அனுராக் தாகூர் ஆறு முறையும், அஸ்விணி வைஸ்ணவ் நான்கு முறையும். நிக்ஷீகாந்த் துபே 10க்கும் அதிகமான முறையும், பூபேந்தி யாதவ் ஐந்து முறையும் ராகுல் காந்தி பேசும் போது குறுக்கிட்டனர் என்று காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications