ரயில்வே ஊழியர் மனைவியிடம் போனில்... ‘ஓகே’ என்று சொன்ன ஒற்றை வார்த்தை.. வேலைக்கே ஆப்பு
டெல்லி: மனைவி போனில் தகராறு செய்து கொண்டிருந்த போது , அவரிடம் 'ஓகே’ என்ற ஒற்றைச்சொல்லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ரயில்வே அதிகாரி ஒருவர். சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் கமலூர் ரயில் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்த ஒருவரின் விவாகரத்து வழக்கில் வெளியான பரபரப்பு தகவல்ளை பற்றி பார்ப்போம்..
திருமணங்கள் தினமும் எந்த அளவிற்கு நடக்கிறதோ, அதில் கணிசமான அளவிற்கு தினமும் விவகாரத்து கேட்டு வழக்குகளும் தினமும் நடக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக சில காலங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். பின்னர் நிரந்தரமாக பிரிந்து வேறு ஒரு வாழ்க்கை துணையை திருமணம் செய்ய விரும்புகிறார்கள்.

அப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றால், ஏற்கனவே நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். அதாவது விவகாரத்து செய்ய வேண்டும். இதேபோல் சிலர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து மறுமணமே வேண்டாம் என்று தனியாக வாழ்கிறார்கள். அதற்கு கணவன் அல்லது மனைவி செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் கணவன் மனைவிடம் வேலை நேரத்தில் சண்டை போடும் போது செய்யும் தவறு.. அவரது வேலைக்கே உலைவைத்துவிடும்.. அப்படியான சம்பவம் சத்தீஸ்கர் மாநில ரயில்வே அதிகாரிக்கு நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் கமலூர் ரயில் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சத்தீஸ்கர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், "சத்தீஸ்கரின் துர்க்கி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 2011-ம் ஆண்டு நான் கல்யாணம் செய்தேன். ஆனால் அவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது எனக்கு தெரியவந்தது. இதுபற்றி பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அவரது தந்தையிடமும் இதுபற்றி கூறினேன். இது தொடர்பாக மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஒருமுறை நான் ரயில் நிலையத்தில் பணியில் இருந்தேன். அப்போது மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ள பகுதியை கடந்து செல்லும் ரயிலுக்கு அனுமதி கேட்டு தொலைபேசி வந்தது. அதை எடுத்தபோது, மற்றொரு போனில் எனது மனைவி என்னை தொடர்பு கொண்டு என்னிடம் தகராறு செய்தார். கோபத்தில் ஓ.கே. என்று அவருக்கு பதில் கூறினேன். அதே நேரம் மறுமுனையில் இருந்த சக ரயில் ஊழியர், சிக்னலுக்காக காத்து இருந்த ரயிலுக்குதான் நான் ஓ.கே. சொன்னதாக புரிந்து கொண்டு அனுமதி கொடுத்துவிட்டார். ரயிலும் கடந்து சென்றுவிட்டது.
சட்டப்படி அந்த நேரம் ரயிலுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதால் நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். மேலும் நான் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததால் என்மீது பொய்யாக வரதட்சணை புகார் செய்துள்ளார் என் மனைவி" என்றார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ரயில்வே அதிகாரியின் விவாகரத்து மனுவை ஏற்றுக் கொண்டதுடன், அவரது மனைவி கொடுத்த புகார்கள் பொய்யானது என்று தள்ளுபடி செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications