"ரயில்வே துறை செய்தது மிக பெரிய தவறு.. அதை சரி செய்ய ஒரே வழிதான்!" வந்தே பாரத்தை வடிவமைத்த மணி பரபர
டெல்லி: ரயில்வே சாதாரண மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததன் மூலம் தவறு செய்துவிட்டதாக வந்தே பாரத் ரயில்களை உருவாக்குவதில் மூளையாக இருந்த முன்னாள் ரயில்வே அதிகாரி சுதன்ஷு மணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கவனம் வந்தே பாரத் ரயில்களில் மட்டும் இருப்பதாகவும் ஏசி டிக்கெட் எடுக்க முடியாத மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரயில்வே துறை ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இந்திய ரயில்வே தொழிற்சாலையில் ஆகஸ்ட் 2016 முதல் டிசம்பர் 2018 வரை மேலாளராகப் பணிபுரிந்தவர் தான் மணி.. வந்தே பாரத் ரயில்களை உருவாக்குவதில் இவருக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்தான் இப்போது ரயில்வே துறை சாதாரண மக்களின் பயணம் குறித்துச் சிந்திக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
வந்தே பாரத் மணி: இது குறித்து மணி மேலும் கூறுகையில், "வந்தே பாரத் என்பது அதிகம் செலவு செய்தாலும் ஓகே சவுகரியமாகப் பயணிக்க வேண்டும் என்பவர்களுக்கான ரயில்.. அதேபோல சாதாரண மக்களும் கண்ணியத்துடன் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.. அவர்களுக்காகவும் நீங்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.. இதற்கு முன்பும் இது குறித்து யோசித்தது இல்லை.. ஆனால், இப்போது நிலைமை மோசமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
கடந்த காலங்களிலும் தினசரி பயணிக்கும் கூலி வேலை செய்வோர் அல்லது மாணவர்கள் பெரும்பாலும் சாதாரண டிக்கெட் உடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் செல்வார்கள். ஆனால், இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது. முன்பு சில மாநிலங்களில், குறிப்பாகப் பீகார், ஒடிசா மற்றும் உ.பி-இல் தான் தொழிலாளர்கள் அல்லது தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் இதுபோல பயணிப்பார்கள். நானே பல வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால், இப்போது முன்பைவிட நிலைமை மோசமாகிவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.
ஏசி பெட்டிகள்: சில ஆண்டுகளுக்கு முன்பு ஏசி பெட்டிகளைத் தயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் ஏசி அல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்தது. பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராக இருந்த போது படிப்படியாக அனைத்து ரயில்களும் ஏசி வசதி கொண்டதாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் ஏசி வசதிகளை வழங்குவது நல்ல யோசனையாக இருந்தாலும், அது நடக்கவில்லை..
இதற்கு கடும் விமர்சனம் எழுந்ததால் அரசு தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டது. மீண்டும் ஏசி பெட்டிகள் குறைவு.. ஏசி இல்லாத பெட்டிகள் அதிகம் என்ற கொள்கையைக் கையில் எடுத்தது. ஆனால், இதைக் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
சாதாரண பெட்டிகள் குறைவு: இப்போதும் பல ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்யப்படும் ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இப்படி திடீரென பெட்டிகள் குறைக்கப்பட்டால் அந்த மக்கள் எங்குச் செல்வார்கள்? அவர்களும் பயணிக்க வேண்டும் தானே.. இதன் காரணமாகவே அவர்கள் ஏசி பெட்டிகள் நுழையும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.
ரயில்வே துறை கவனம் வந்தே பாரத் மீது இருந்தது.. அது ரயில்வே துறைக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. ஆனால், அது சாதாரண பயணிகளின் தேவைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.. தேர்தலிலும் கூட வந்தே பாரத் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. சொல்லப் போனால் அது அரசுக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்தியது.
தேர்தல்: பணக்காரர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கலாம்.. சாதாரண மக்களால் பயணிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இதுபோன்ற சூழல்களில் இந்த விமர்சனங்கள் வரவே செய்யும். வந்தே பாரத் எதையும் சாதிக்கவில்லை என்று பலரும் விமர்சித்தே வருகிறார்கள்.
ஆனால், வந்தே பாரத் என்பது தனியானது. அதைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் சாதாரண மக்களைப் பற்றியும் மறந்துவிடக்கூடாது. ஏதோ ஒரு இடத்தில் ரயில்வே துறை தவறு செய்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
தீர்வு என்ன: இந்த தவறை சரிசெய்ய ரயில்வே துறை இப்போது ஏசி பெட்டிகள் தயாரிப்பைக் குறைத்து.. ஏசி அல்லாத பெட்டிகளைத் தயாரிப்பதை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அதுவும் தவறு. நீங்கள் அதிக ஏசி பெட்டிகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.. அதேநேரம் சாமானிய மக்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.. இரண்டிலும் கவனம் இருக்க வேண்டும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications