ராணுவ தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா-சீனா, லடாக் எல்லையில் உள்ள கல்வான் மலைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய கோழைத்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Rajnath meeting Chief of Defence Staff General Bipin Rawat, the three service chiefs

அதேநேரம் இந்திய தரப்பும் அங்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாக எல்லையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் தலைமை ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களை பாதுகாக்கவும், சீன ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதும் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எப்போதுமே நம் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு, தக்க பதிலடி கொடுத்துதான், ராணுவத்தின் வழக்கம் என்பதால், இம்முறையும் தாக்குதலுக்கான யுக்தி இந்த ஆலோசனை கூட்டத்தில் வகுக்கப்பட்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த மாதிரி முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+