3 மாநில ராஜ்யசபா தேர்தல்.. கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்.. உத்தர பிரதேசம், இமாச்சலில் வாகை சூடிய பாஜக
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் இன்று ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அதில் கர்நாடகவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர், பாஜக வேட்பாளர் ஒருவர் வென்ற நிலையில் ஜேடிஎஸ் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். மாறாக உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமாஜ்வாதி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிமாறி ஓட்டளித்ததால் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நமது நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவில் எம்பிக்களுக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் போது தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்படு இடங்கள் நிரப்பப்படும். அதன்படி இப்போது பல மாநிலங்களில் ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்பட்டன.

ராஜ்யசபா தேர்தல் என்பது மறைமுக தேர்தலாகும். அதாவது நாம் தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்கள் இணைந்து ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். சட்டசபையில் ஒரு கட்சிக்கு அப்போது எத்தனை இடங்கள் இருக்கிறது என்பதைப் பொறுத்து ராஜ்யசபாவில் அவர்களின் பிரதிநிதித்துவம் மாறும்.
ராஜ்யசபா தேர்தல்: அதன்படி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர், ஹனுமந்தய்யா ஆகியோரின் பதவி காலம் முடிவடையும் நிலையில், அந்த இடங்களை நிரப்பத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான், நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதலில் பாஜக சார்பில் நாராயண பாண்டகே மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியும் குபேந்திர ரெட்டியை வேட்பாளராக அறிவித்தது. 4 காலியிடங்களுக்கு 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு நிலையில், அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எத்தனை பேர் ஆதரவு தேவை: கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரு கட்சி வெல்ல 45 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், 3 வேட்பாளர்களை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும். மறுபுறம் அங்கே பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு19 எம்.எல்.ஏக்களும் இருக்கிறார். முதல் வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களை கழித்துவிட்டால் மீதி பாஜகவிடம் 21 எம்எல்ஏக்கள் இருப்பார்கள்.
அத்துடன் 19 ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சேர்த்தாலும் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு தான் கிடைக்கும். இது வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் 5 வாக்குள் குறைவாகும். இதனால் பாஜக கூட்டணியின் 2ஆவது வேட்பாளர் எப்படி வெல்வார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் உள்ள சுயேச்சைகளில் சிலர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட பாஜக பக்கம் கடைசி நேரத்தில் சாயலாம் என்று கூறப்படுகிறது.
குதிரை பேரம்: ஏற்கனவே இது தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டன. பாஜக தங்கள் எம்எல்ஏக்களை வாங்கக் குதிரை பேரம் நடத்துவதாகத் தெரிவித்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், இருப்பினும், பாஜக- ஜேடிஎஸ் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களை தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் வெற்றி: இந்நிலையில் தான் இன்று மாலையில் எம்எல்ஏக்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் அஜய் மக்கான் 47 ஓட்டுகளும், சையத் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் தலா 46 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். அதேபோல் பாஜக வேட்பாளர் நாராயண்சா பாண்டேகாவும் வெற்றி பெற்றார். மாறாக காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை நம்பி களமிறங்கிய ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தார். ்அதேபோல் இன்னொரு பாஜக எம்எல்ஏ ஓட்டளிக்க வரவில்லை. காங்கிரஸ் வேட்பாளருக்க ஆதரவாக வாக்களித்த எஸ்டி சோமசேகருக்கு முதல்வர் சித்தராமையாக நன்றி தெரிவித்துள்ளார்.
மற்ற 2 மாநிலங்கள்: கர்நாடகா மட்டுமின்றி இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரையிலும் இதே நிலை தான். அங்கே காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட குழப்பமான சூழலே இருக்கிறது. ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி இடம் இருந்தாலும் அங்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இறுதியாக பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அபிசேக் மான்வி சிங்கி தோல்வியடைந்தார்.
அதேபோல உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 10 எம்பி இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. அதில் ஆளும் பாஜக ஏழு எம்பிகளையும் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி மூன்று எம்பிக்களையும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி அனுப்பலாம். ஆனால் பாஜக முன்னாள் சமாஜ்வாதி உறுப்பினரும் தொழிலதிபருமான சஞ்சய் சேத்தை 8ஆவது வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அங்கே மாநிலத்தில் ஒரு வேட்பாளருக்கு 37 வாக்குகள் தேவைப்படும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் 10 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
இன்று நடந்த தேர்தலில் பாஜகவின் 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி சார்பில் 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த நிலையில் பாஜகவின் 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய ராஜ்யசபா தேர்தலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்த நிலையில் உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்கள் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது











Click it and Unblock the Notifications