சிபிஐ தலைமையகத்திலேயே சிபிஐ ரெய்டு.. லஞ்ச புகாரில் சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு கிடுக்குப்பிடி!
சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் நேற்று சிபிஐ தலையகத்தில் சிபிஐ அமைப்பு ரெய்டு நடத்தியது.
Recommended Video

டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பு ரெய்டு நடத்தியது.
இந்திய வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. அதேபோல் நேற்று முக்கியமான சிபிஐ அதிகாரியான தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.

ரெய்டு நடத்தினார்
நேற்று மாலை சிபிஐ இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தை செய்தது. சிபிஐ அமைப்பு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே நேற்று ரெய்டு நடத்தியது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் குட் புக்கில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்தான் இந்த ரெய்டை நடத்தியது. சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் அறைகளில் சோதனை நடந்தது.

நீக்கப்படுவார்
சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா இந்த வார இறுதியில் பதவி விலகுவார். இல்லையென்றால் இந்த வார இறுதியில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். நேற்று சிபிஐ இயக்குனர் வெர்மா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானாவிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிரதமர் மோடியே நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

கைது செய்தனர்
இந்த நிலையில் அஸ்தானாவிற்கு நெருக்கமான சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐயை சேர்ந்த அதிகாரி தேவேந்தர் குமார் இன்று கைது செய்யப்பட்டார். அஸ்தானா லஞ்சம் வாங்க உதவி செய்தது இவர்தான் என்று தகவல்கள் வருகிறது. இதை தொடர்ந்து இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

என்ன வழக்கு
இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டில் 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் பல சிபிஐ அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர் என்று புகார் வந்தது. அதனால் இது தொடர்பான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகேஷ் அஸ்தானா 3 கோடி வாங்கி குற்றவாளிகளை விடுவித்தார் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications