DPஐ பார்த்தேன்.. உன் குரலை கேட்டேன்.. மிட்நைட்டில் டிரைவர் "ரொமான்ஸ் ".. அதிர்ந்த பெண்.. என்னாச்சு
ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது
டெல்லி: ரேபிடோ பைக்கை பயன்படுத்திய இளம்பெண்ணிடம் ஓட்டுநர் ஒருவர் தகாத முறையில் பேசியிருக்கும் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சோஷயல் மீடியாக்களில் பரவி வருகின்றன.
அன்றாட போக்குவரத்து தேவைக்கு பலரும் தனியாரையே நம்பியிருக்க வேண்டியதாக இருக்கிறது. அரசு பேருந்து, ரயில் போன்றவற்றின் எண்ணிக்கையானது போதுமான அளவில் இல்லாத காரணத்தினால் தனியார் போக்குவரத்தின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. முதலில் தனியார் பேருந்து வந்த நிலையில், தற்போது தனியார் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டன. இது ஒரு கட்டத்தில் பைக்-டாக்ஸி வரை விரிவடைந்தது. பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த பைக்-டாக்ஸி பயன்பட்டது.
ஆனால் தனியார் வாடகை கார்கள் வந்தபோதே அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கேற்றாற்போல பல கார் டிரைவர்களும் சில சர்ச்சையில் சிக்கினர். பெண்களை கடத்துவது, பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள் என இந்த குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து வாடகை கார்களுக்கு என சில கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டுவந்தனர். இந்த கட்டுப்பாடுகள் கறாராக அமல்படுத்தப்பட்ட பின்னர்தான் இக்குற்றங்கள் குறைய தொடங்கின.

பைக்-டாக்ஸி
இப்படி இருக்கையில் பைக்-டாக்ஸியின் பாதுகாப்பு அம்சம் குறித்து பலரும் அச்சம் எழுப்பியிருந்தனர். ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட பைக் எண்ணும், நாம் புக் செய்த பின்னர் வந்து நிற்கும் பைக்கும் வேறு வேறாக இருக்கும். அதேபோல அதிவேகத்தில் பைக்கை ஓட்டுவது போன்ற சம்பவங்கள் குறித்த புகார்கள் அடிக்கடி மேலெழுந்தன. இப்படி இருக்கும் நிலையில்தான் ரேபிடோ பைக் டிரைவர் ஒருவர் இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவிவருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரேபிடோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஸ்கிரீன் ஷாட்
அதாவது, இந்த சம்பவம் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை கடந்த 13ம் தேதி husnpari எனும் டிவிட்டர் பயனர் பகிர்ந்திருக்கிறார். அதில், இளம்பெண் ரேபிடோவுக்காக தனது லொகேஷனை பகிர்ந்திருக்கிறார். இந்த சவாரியை முடித்த பின்னர் அப்பெண் தனது மெசேஜை டெலிட் செய்திருக்கிறார். இந்த சவாரி இரவு 11.15க்கு முன்னர் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ரேபிடோ ஓட்டுநர் இளம்பெண்ணின் வாட்ஸ்அப் நம்பருக்கு சாட் செய்திருக்கிறார். அதுவும் நள்ளிரவு 1.25 மணிக்கு. அதில் அவர் கூறியிருந்த சில வார்த்தைகள்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. அதாவது, "உங்கள் குரலை கேட்டுவிட்டு, DPல் நீங்கள் வைத்திருந்த போட்டோவை பார்த்துவிட்டுதான் நான் வந்தேன். வேறு யாராவது இருந்தால் வந்திருக்கவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

ரேபிடோ ஓட்டுநர்
ஏதோ அவசரத்திற்குதான் ரேபிடோ சேவையை பயன்படுத்துகிறோம். ஆனால், இப்படி மொபைல் நம்பரை பயன்படுத்தி அநாகரீகமாக மெசேஜ் அனுப்பது கொஞ்சம் கூட நியாமில்லை என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், ரேபிடோ நம்பகமானது கிடையாது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த புகாருக்கு 'ரேபிடோ கேர்ஸ்' பதிலளித்திருக்கிறது. ஓட்டுநர் குறித்த விவரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியில் கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உலக வங்கியோ அல்லது சர்வதேச நாணய நிதியமோ கடன் கொடுப்பதெனில் சும்மா ஒன்றும் கொடுத்துவிடாது.

பொது போக்குவரத்து
அதற்கு பின்னர் ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பொது போக்குவரத்தை குறைப்பது. சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுபோக்குவரத்து இருந்தாலும், தேவைக்கு ஏற்ப எண்ணிக்கையில் இல்லை என்பதுதான் பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறு பொது போக்குவரத்து குறைய குறைய தனியாரின் வரத்து அதிகரிக்கம். அப்போது இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications