என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது!
டெல்லி: என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது என்று அளவில் உள்ளது அவரது பாராட்டு பொதுவாகவே பிரதமர் மோடியை ஒபிஆர் எனப்படும் ஓபி ரவீந்திராநாத் வியந்து பாராட்டுவார் என்றாலும், லோக்சபாவில் பிரதமர் மோடியை பாராட்டிய விதம் பாஜகவினரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Recommended Video

லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் அதிமுகவைச் சேர்ந்த தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர் கூறும் போது,
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வந்ததை விமர்சித்த ரவீந்திரநாத், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து ஜல்லிக்கட்டை ராகுல்காந்தி ரசிக்கிறார் என்றார்.

மோடி ஆதரவால் மாற்றம்
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் சிறப்பான முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு காரணமாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்த வரலாறை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

திமுக எம்பிக்கள் கூச்சல்
தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இன்று நாட்டிலேயே சிறந்த மாநிலமாக பல்வேறு விருதுகளை பெற்று வருவதாக கூறிய ரவீந்திரநாத் எம்பி,. ஆனால் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகம் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல வெற்றுக் கூச்சலிட்டு வருகிறார்கள் என்று விமர்சித்தார்.

ஜவுளி பூங்கா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை வெகுவாக பாராட்டிய ஓபி ரவீந்திரநாத், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார் என நன்றி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பெரும்தொற்றை தடுக்க தமிழகத்துக்கு கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ரவீந்திரநாத், பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 2 பூங்காக்கள் தமிழகத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரவீந்திரநாத் பாராட்டு
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய ரவீந்திராத், மழை பெய்யும் போது பிற பறவைகள் தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து மழையிலிருந்து தப்ப முற்படும்போது பருந்து மட்டும் மேகத்துக்கு மேல் பறந்து தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லும் என்றும், அதேபோல் தான் கொரோனா பெரும்தொற்று காலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பிரச்னையை சமாளித்தார் என்று வித்தியாசமான முறையில் பாராட்டினார். இதை கேட்டு பாஜகவினரே ஆச்சர்யம் அடைந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications