"நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வெற்றி!" திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். அதில் திரௌபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன.

திரௌபதி முர்மு
கடந்த ஜூலை 18இல் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்முவுக்கு அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளது. மூன்றாம் சுற்றின் முடிவில் திரௌபதி முர்மு 50%க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டினார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இதற்காகப் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா வரலாற்றைப் படைத்து உள்ளது. 130 கோடி இந்தியர்கள் கிழக்கு இந்தியாவின் தொலைதூரப் பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் மகளை நம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்து உள்ளனர்.

நம்பிக்கை ஒளி
திரௌபதி முர்முஜியின் வாழ்க்கை, அவரது ஆரம்பக்கால போராட்டங்கள், அவரது சேவை மற்றும் அவரது முன்மாதிரியான வெற்றி ஆகியவை ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது. அவர் நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நம்பிக்கை ஒளியாக உருவெடுத்துள்ளார்.

நன்றி
திரௌபதி முர்மு ஒரு சிறந்த எம்எல்ஏ மற்றும் அமைச்சராக செயல்பட்டவர். ஜார்க்கண்ட் ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றியவர். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முன்னின்று வழிநடத்தி வலுப்படுத்தும் ஒரு சிறந்த குடியரசு தலைவராக அவர் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்த அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரௌபதி முர்முவின் சாதனை வெற்றி நமது ஜனநாயகத்திற்கு நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வாழ்த்து
அதேபோல பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ஆகியோர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதேபோல ராகுல் காந்தி, மாயாவதி, ப சிதம்பரம் உள்ளிட்டோரும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications