டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்கூட்டரில் இவிஎம் மெஷின்.. வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17-ல் மறுவாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி: வேளச்சேரி தொகுதியில் இருசக்கரவாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்(எண் 92) வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

Re-polling at a polling station in Velachery constituency on April 17

அப்போது, 2 மின்னணு இயந்திரங்கள், இரண்டு கட்டுப்பாடு இயந்திரங்கள், ஒரு விவி பேட் ஆகியவை இருசக்கரவாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால் இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தடை விதித்த தேர்தல் ஆணையம்.. மம்தாவின் பக்கம் நின்ற ஸ்டாலின், சிவசேனாவும் ஆதரவுதடை விதித்த தேர்தல் ஆணையம்.. மம்தாவின் பக்கம் நின்ற ஸ்டாலின், சிவசேனாவும் ஆதரவு

எதிர்க்கட்சி தலைவர்களும் இது கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'தேர்தல் பணியாளர்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படாதது எனவும் ஆனால் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்ததாகவும் கூறி இருந்தார்.

Re-polling at a polling station in Velachery constituency on April 17

வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் வாக்குச்சாவடி எண் 92-ல் மறு வாக்குப்பதிவு நடக்கும் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் கட்டுப்பாடு இயந்திரங்கள், ஒரு விவி பேட் ஆகியவை இருசக்கரவாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்த்துள்ளது. ஏப்ரல் 17-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

English summary
The Election Commission has ordered a re-poll to be held on April 17 at a polling station in Velachery constituency in connection with the transport of voting machines in a two-wheeler
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X