பாஜக கோட்டை விட்டது எங்கே..? அமித்ஷா, மோடி அணுகுமுறை இனி மாறுமா? புட்டு புட்டு வைத்த யோகேந்திர யாதவ்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக பின்னடவை சந்தித்ததற்கு அதன் இந்துத்வா அணுகுமுறை மற்றும் ஆணவப்போக்கு உள்ளிட்டவையே காரணம் என்று தேர்தல் வியூக வல்லுனரும் சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ் ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியாததால் பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 8 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாஜக சறுக்கியது எங்கே என்பதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக யோகேந்திர யாதவ் ஒன் இந்தியா ஆங்கில யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளர்.
தேர்தல் வியூக வல்லுநரும் சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது தொடர்பாக வெளியிட்ட கருத்துக் கணிப்பு மிக துல்லியமாக இருந்தது. ஊடகங்களில் 400 இடங்கள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், இவர்
பாஜக: 240 - 260
தேசிய ஜனநாயக கூட்டணி: 35 - 45
காங்கிரஸ்: 85 -100
இந்தியா கூட்டணி: 120 - 135 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.
யோகேந்திர யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது கணிப்புகள் அதிர்ஷ்டவசமாக துல்லியமாக அமைந்துவிட்டது. ஆனால் அது வெளிப்படையாக இருந்தது. ஆனால், இது குறித்து யாருமே பேசவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் தவறாக போகும். அது ஒரு பிரச்சினையே இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பங்குச்சந்தையிலும் பெட்டிங்க் சந்தையிலும் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஊடகங்களும் பாஜகவிற்கு உடந்தையாக செயல்பட்டது. பாஜக கோஷங்களை ஊடகங்களே எழுப்பியது" என்றார். பாஜக எது தவறாக போனது எனக் கேட்ட போது, சர்வாதிகாரிகளுக்கு இதுதான் நடக்கும். மக்களிடம் எதையும் விற்கலாம் என அவர்கள் நினைத்து விட்டார்கள். பாஜகவின் அகம்பாவம் இது. ஊடகங்களை பாஜக மிக லாவகமாக கையாண்டது.
அதனால் ஊடக அச்சுறுத்தல் அவர்களுக்கு இல்லை. பாஜக எண்ணிக்கை குறைந்து இருப்பதால் மோடி மற்றும் அமித்ஷாவின் அணுகுமறை மாறுமா? என கேட்கிறீர்கள். இதுவரை அப்படி தெரியவில்லை. தனிப்பெரும்பான்மை பெற்றால் பாஜக இன்னும் ஆணவம் மிக்கதாக மாறும்.
இந்தியா கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் இருந்தன. எண்டிஏவுக்கு ஆதரவாக இருந்தன. அரசாங்கத்தை பொறுப்புக்கு உள்ளாக்கவில்லை. ஆளும் கட்சியாக இருப்பதால் வரம்பற்ற பணம் எதிர்க்கட்சியை விட அதிகமாக பாஜகவிற்கு இருந்து இருக்கும். அரசு அமைப்புகள் பாஜக தொண்டர்கள் போல செயல்பட்டன.
எதிர்க்கட்சிகளின் 235 என்பது 335 க்கு நிகரானது. இந்தியா கூட்டணியின் அணுகுமுறை மாறியிருந்தால் இன்னும் சிறந்த பெர்பார்மன்ஸ் செய்து இருக்கலாம். கூட்டு தேர்தல் அறிக்கை, சீட் பங்கீடு முன்பே முடித்து இருக்கலாம்.
ஆட்சி நிர்வாகத்தில் இனி பல்வேறு மாற்றங்கள் இருக்கும். எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் விவாதங்க்கள் நடைபெறும். ஊடகங்கள் நேர்மையாக இருக்கும். பிரதமர் மோடி இடத்தில் நேரு இருந்திருந்தால் இது போன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ராஜினாமா செய்து இருப்பார்" என்றார்.












Click it and Unblock the Notifications