காங்கிரஸை விடுங்க.. ராஜஸ்தானில் பாஜகவுக்கே செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த ரிபப்ளிக் டிவி கணிப்பு
டெல்லி : ராஜஸ்தானில் ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 115-130 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், , அதேநேரம் காங்கிரஸ் கட்சி 65-75 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது. ராஜஸ்தானை மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது நம்மூரில் உள்ள அதிமுக திமுக போல், அங்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்தததால் ஒத்திவைக்கப்பட்டது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து வருடங்கள் ஆண்ட கட்சி அடுத்த முறை ராஜஸ்தானில் மாறிவிடும். இதுதான் எதார்த்தமான ஒன்றாக ராஜஸ்தானில் காலம் காலமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவானதால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள்.

ஏனெனில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தானில் ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 115-130 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், , அதேநேரம் காங்கிரஸ் கட்சி 65-75 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications