Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி கணக்கு பத்திரம்.. கூகுள், பேஸ்புக் மூலம் திருடப்படும் பாஸ்வேர்டு.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், இன்ஸ்டாகிராம் போன்ற ஷோசியல் மீடியாக்களைப் பயன்படுத்துவோரின் பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஏற்படவுள்ளதால் இதில் இருந்து தப்பிக்க உடனடியாக அனைத்து பாஸ்வேர்டுகளையும் பொதுமக்கள் மாற்ற வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, சமையல் குறிப்பு முதல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதும் வரை கூகுளின் உதவி இல்லாமல் ஓரணுவும் அசையாது என்பதுபோல உலகமே மாறிவிட்டது. இந்நிலையில், கூகுள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social media Bank password

சோஷியல் மீடியா பக்கங்களின் பாஸ்வேர்டுகள், வங்கிக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் போன்றவை கசிந்துள்ளதால் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களுடைய பாஸ்வேர்டுகளை மாற்றி அமைப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆனால், இதுவரை இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை

கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய தளங்களைப் பயன்படுத்தும் 18.4 கோடிக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களின் யூஸர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட டேட்டாக்கள் அடங்கிய தளத்தை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். பொதுமக்களின் இந்த டேட்டாக்கள் டார்க் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில், பொதுமக்கள் மட்டுமின்றி பிரபல பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுத் துறை டேட்டாக்களும் கசிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஃபெளலர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்டு, கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட டேட்டா சேமிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து முக்கிய தளங்களும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஃபெளர் நிறுவனத்தை பலரும் தொடர்புகொண்டு தகவலை சரிபார்த்து வருகின்றனர். பாஸ்வேர்டுகள், யூஸர்களின் பெயர்கள் கசிந்துள்ளது உண்மை எனத் தெரியவந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதலை நடந்தால் நிறுவனங்களை விட பொதுமக்களே அதிகளவில் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.

எடுத்துகாட்டாக பொதுமக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை கூகுள் குரோம் மூலமாகப் பயன்படுத்தி இருந்தால் வங்கி டேட்டாக்கள் கசிந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சைபர் குற்றவாளிகள் குறிப்பிட்ட தரவுகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டு சைபர் அட்டாக்கில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்த தாக்குதலில் இருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக தப்பிக்க தங்களுடைய சோஷியல் மீடியா அக்கவுண்ட்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் பாஸ்வேர்டை மாற்றியமைப்பது மிகவும் நல்லது என்று அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, ஓடிபி பதிவிட்டால் மட்டுமே அக்கவுண்டுகளைப் பயன்படுத்த முடியும் என்ற வகையில் மாற்றி அமைப்புத நல்லது என்றும், தனித்தனி கடவுச் சொல்லை பயன்படுத்துவது நல்லது என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+