டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹோட்டல்களுக்கு பறந்த உத்தரவு.. சர்வீஸ் சார்ஜுடன் ஜிஎஸ்டி?.. மத்திய அரசு அதிரடி.. பொதுமக்கள் வரவேற்பு

ஹோட்டல்களில் சேவை கட்டணத்தை தனியாக வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில், சேவை கட்டணத்தை தனியாக வசூலிக்கக் கூடாது, கட்டண ரசீதிலும் சேர்க்க கூடாது என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்களுக்கு இது தொடர்பாக புதிய நெறிமுறைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது: ஹோட்டல்களும், லாட்ஜ்களும், ரெஸ்ட்டாரெண்ட்களும், தங்கள் வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது..

12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 கஸ்டமர்கள்

கஸ்டமர்கள்

அந்த கஸ்டமர்களுக்கு சேவை பிடித்திருக்கும்பட்சத்தில், அவர்களாகவே இஷ்டப்பட்டு கொடுப்பதே, சேவைக் கட்டணமாகும்.. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமானதும் கூட... அதனால், சேவை கட்டணம் தருவது நுகர்வோரின் விருப்பப்படிதான் என்பதை சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரெண்ட்கள் தெளிவாக தெரிவித்துவிட வேண்டும்.. அதற்காக, உணவு கட்டணத்துடன் சேர்த்து, மொத்த தொகைக்கும் ஜிஎஸ்டி விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது...

 சர்வீஸ் சார்ஜ்

சர்வீஸ் சார்ஜ்

ஒருவேளை அந்த நிறுவனங்கள் சேவைக்கட்டணத்தை கட்டாயமாக வசூலிப்பதாக, நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு அந்த நிறுவனத்திடமே சொல்லலாம்.. மாறாக, தன்னிசையாக சேவை கட்டணத்தை, பில் கட்டணத்துடன் சேர்க்கும் ஹோட்டல்கள் அல்லது லாட்ஜ்கள், ரெஸ்ட்டாரெண்ட்கள் மீது கஸ்டமர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915 என்ற எண்ணில் புகார் தரலாம்..

 ரெஸ்ட்டாரெண்ட்கள்

ரெஸ்ட்டாரெண்ட்கள்

அல்லது என்சிஎச் என்ற மொபைல் ஆப் மூலமாக, கஸ்டமர் ஹெல்ப்லைன் மற்றம் நுகர்வோர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஹோட்டலும், அல்லது ரெஸ்ட்டாரெண்ட்டும் நுகர்வோர்களை சேவை கட்டணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்த முடியாது என்ற மத்திய அரசின் உத்தரவானது, வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

இதற்கு முன்பு, 2017-ல் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.. அதன்படி அளிக்கப்படும் பில்லில் சேவைக் கட்டணத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டும் வந்துள்ளன.. இனி அப்படி கிடையாது. இதுபோன்று சேவை கட்டணம் விதிப்பதற்கு சட்ட ரீதியில் எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை என்று ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் பிரதிநிதிகளிடம் நிதி அமைச்சகம் ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

கடிவாளம்

கடிவாளம்

இந்த நடவடிக்கை எடுப்பதற்கு காரணம், பெரும்பாலும் நுகர்வோர்கள், சேவை வரியையும். சேவைக் கட்டணத்தையும் ஒன்றாக நினைத்து செலுத்தி விடுகின்றனர்.. அதற்குதான் இப்படி ஒரு கடிவாளம் போடப்பட்டுள்ளது என்றும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதி 2019-ன்படி இவ்விதம் வசூலிப்பது முறையற்ற வணிக நடைமுறை என்றும் நிதி அமைச்சகம் தற்போது விளக்கமாக சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Restaurants and hotels should not charge separate service charges, says central government ஹோட்டல்களில் சேவை கட்டணத்தை தனியாக வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X