“ஹோட்டலில் சேவை கட்டணம் வாங்க கூடாது, ஆனா இதில் கட்டுப்பாடு இல்ல” - இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே!
டெல்லி : ஹோட்டல்களில் உணவு கட்டணம் மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், விரைவில் சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான பில்லில் சேவை கட்டணத்தை சேர்ப்பது சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்வதில் கட்டுப்பாடு ஏதும் இல்லை என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில்
சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர கட்டாயமில்லை என்பது அரசின் விதிமுறை. ஆனால் உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், விதிமுறைகளை மீறி கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

பேச்சுவார்த்தை
மேலும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம், உணவக பிரதிநிதிகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. உணவுகளின் விலை மற்றும் உரிய வரிகளை மட்டுமே வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். மற்ற கட்டணங்களை கட்டாயமாக வசூலிப்பது சட்டப்படி நியாயமற்ற வணிக முறையாக கருதப்படும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

உணவகங்கள் எதிர்ப்பு
ஆனால், சேவை கட்டணங்கள் குறித்து மெனு கார்டு மற்றும் உணவக வளாகத்திலேயே குறிப்பிட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு முன்பே அதுகுறித்து தெரியும். இது இருதரப்புக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் எனவே இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை அல்ல என ஹோட்டல் நிறுவனங்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது
இந்நிலையில், டெல்லியில் நேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான உணவு பில்லில் சேவை கட்டணத்தை சேர்க்கக் கூடாது. தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

விலையை உயர்த்திக் கொள்ளலாம்
உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த கட்டுப்பாடு ஏதும் இல்லை. ஊழியர்களின் சேவையில் திருப்தி ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தாங்களே முன்வந்து டிப்ஸ் தருவார்கள். உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது என்றும் உணவு விலை மீது சேவை கட்டணம் வசூல் செய்வது ஒரு ஏமாற்று வேலை எனத் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் அதிச்சி
தொடர் புகார்களைத் தொடர்ந்து, சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு எச்சரித்ததை வரவேற்ற வாடிக்கையாளர்கள், உணவின் விலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம், அதற்கு கட்டுப்பாடு இல்லை என உணவக தரப்புக்கு ஐடியா கொடுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவுகளின் விலை ஏற்கனவே தாறுமாறாக இருக்கும் நிலையில், இந்த அறிவுறுத்தல் தேவையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications