சிக்கிய ஜாக்குலின்.. நடுராத்திரி வரை நீடித்த விசாரணை.. ரூ.200 கோடி மோசடி வழக்கில் கிடுக்கிப்பிடி
பணமோசடி குறித்து ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்
டெல்லி: பண மோசடி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்... இவர் ஒரு தொழில் அதிபர் என்று சொல்லி கொண்டு, நிறைய மோசடிகளை செய்துள்ளார்.
இந்திய அளவில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை தனக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லியே அத்தனை மோசடிகளையும் செய்துள்ளார்.. இது தொடர்பான வழக்குகள் ஏராளமாக உள்ளன.

டிடிவி தினகரன்
இவர் நம் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த 2017-ல் அதிமுகவில் விரிசல் வந்தபோது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் இவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.. டெல்லி குற்றவியல் போலீசார் தினகரனையும் அப்போது கைது செய்திருந்தனர். அவருடன் கைதானவர்தான் இந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர்.. ஆனால், தினகரன் உள்பட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சுகேஷ் மட்டும் இன்னமும் ஜெயிலில் உள்ளார்.

வழக்கு
இதற்கிடையில், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வேறொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர்... அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷுடன் நடிகை ஜாக்குலின் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஜாக்குலின்
இதையடுத்து 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சாட்சியாக அவரை சேர்த்துள்ள அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம், தன்னுடைய முதல் விசாரணையை ஆரம்பித்தது.. இப்போது மறுபடியும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.. இந்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாக்குலின் ஆஜரானார்.. ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது.. ஆனால், ஜாக்குலின் ஷூட்டிங்கில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்றுதான் ஆஜரானார்..

வங்கி கணக்கு
அவரிடம் சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்... நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்துள்ளது.. அப்போது, சுகேஷின் பண மோசடி குறித்த பல்வேறு தகவல்களை ஜாக்குலின் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. மேலும், சுகேஷ் சந்திரசேகரை தவிர, அவர் மனைவி லீலாமரியா பாலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிகிறது.. பின்னர், ஜாக்குலின் வங்கிகணக்குகளும் ஆராயப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications