கட்டுகட்டா.. மக்கள் 2000 ரூபாய் நோட்டைதான் அதிகம் யூஸ் பண்றாங்க.. அடித்து சொல்லும் நிர்மலா சீதாராமன்
ரூ.2000 நோட்டுக்களின் பயன்பாடு குறைந்து விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு தடை விதித்துவிட்டதாகவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார். 2000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என அவர் கூறி உள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மக்களின் பயன்பாட்டில் இருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தடை செய்வதாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய், புதிதாக 2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்த 2000 நோட்டுக்கள் போகப்போக மறையத் தொடங்கியது.

குறைந்த பயன்பாடு
தற்போது 2000 ருபாய் நோட்டுக்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து 500 ரூபாய் நோட்டுக்களே வங்கி ஏடிஎம்களிலும், வணிக நிறுவனங்களிலும் பரவலாக காணப்படுகின்றன. ரூ.2000 நோட்டுக்களின் பயன்பாடு குறைந்து விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு தடை விதித்துவிட்டதாகவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. அதே நேரம் ஏடிஎம் மையங்களில் ரூ.2000 நோட்டை பார்த்தே பல ஆண்டுகளாகிவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.

பி.ஆர்.எஸ். எம்பி கேள்வி
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி எம்பி சந்தோஷ் குமார், "புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் இன்னும் மக்களின் பயன்பாட்டில் இருக்கிறதா? அல்லது அவையும் கருப்பு பணமாக மாறிவிட்டதா? 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்கள் மூலம் வங்கிகளில் செலுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்து இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

நிர்மலா சீதாராமன் பதில்
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், "ஏடிஎம் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டும் என்றோ, நிரப்பக்கூடாது என்றோ எந்த அறிவுறுத்தலையும் வங்கிகளுக்கு நாங்கள் வழங்கவில்லை. அது அவர்களின் விருப்பம்தான்.

ரூ.2000 பயன்பாடு
முந்தைய பயன்பாடு, வாடிக்கையாளர்களின் தேவை, அந்த சூழலுக்கு ஏற்ப எந்த ரூபாய் நோட்டை வழங்க வேண்டும் என்று வங்கிகள் முடிவு செய்துகொள்ளலாம். ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் ஆண்டு அறிக்கையின்படி மார்ச் 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 2022 மார்ச் இறுதியில் ரூ.27.057 லட்சம் கோடி ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications