படுத்த படுக்கையில் நித்தியானந்தா! ஒரு இட்லியை கூட முழுசா சாப்பிட முடியலை! 2022ல் மறக்க முடியுமா?
டெல்லி: நித்தியானந்தா குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்லப்படும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவே வதந்திகள் கிளப்பப்பட்டு அவர் திரும்பி வந்தார்.
பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் கைலாசாவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் தான் தியானம் செய்ய சூரியனே சில நிமிடங்கள் கழித்துதான் உதிக்க வேண்டும் என நான் கட்டளையிட்டதும் அது போல் நடந்தது என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை தெரிவித்திருந்தார். தன்னை சுற்றி கூடியிருந்த வெளிநாட்டினர் மத்தியில் ஆங்கிலத்தில் பேசி அவர்களை வியப்படையச் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான்
ஒரு முறை திருப்பதி ஏழுமலையான் வேடமிட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சமூகவலைதளங்களில் முகமே காட்டாமல் இருந்த நித்தியானந்தா, அப்போது நடந்த மதுரை சித்திரை திருவிழாவின்போதுதான் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது அவருக்கு கடுமையான உடல்நல பாதிப்பு இருந்தது.
கைப்பட எழுதிய கடிதம்
மேலும் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் பீதி கிளப்பியிருந்தனர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில் நான் சாகவில்லை, உயிருடன் இருக்கிறேன். சமாதி நிலையில் இருக்கிறேன், திரும்பி வந்துட்டேனு சொல்லு என எழுதியும் காட்டியிருந்தார். பின்னர் அடுத்தடுத்து பேஸ்புக் பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.
இட்லி கூட சாப்பிட முடியவில்லை
அதில் தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை. ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து 21 நிமிடங்கள் கூட தூங்க முடியவில்லை. பனி மூடிய மலைகள் என்னை சூழ்ந்து இருக்கின்றன. எனக்கு இந்த கிரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற பேராசையும் இல்லை. இந்த கிரகத்தை விட்டு வெளியேற வெறுப்பும் இல்லை.
ஆகாரம் சாப்பிட்டு 6 மாதங்களாச்சு
எனது உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 6 மாதங்களாக ஆகாரம் எதுவும் உட்கொள்ளாததால் வலு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எல்லா மருத்துவ ரிப்போர்ட்களும் நன்றாக இருந்தாலும் உணவை வாயில் போட்டவுடன் வாந்தி வருகிறது.
தூக்கம் இல்லை
6 மாதங்களாக தூக்கம் இல்லை. பக்தர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்மாசனத்தில் அமர்ந்தால் எல்லா நாடிகளும் சுவாசமும் அடங்கியிருக்கும். தற்போது நிர்வி கல்ப சமாதி நிலையில் எனது மனம் அமைதியாக இருக்கும். எனது மனம் இந்த உலகை மறந்துவிட்டது.
கீழே படுக்க வைத்து மூச்சுவிடுமாறு மருத்துவர்கள் கட்டாயம்
என்னால் ஆழ்ந்து மூச்சுவிடமுடியவில்லை. ஆனால் மருத்துவர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சு விடுமாறு கட்டாயப்படுத்துறாங்க. தூக்கம், உணவு இல்லாமல் உடல் நிர்வி கல்ப சமாதிக்கு பழக்கமாகிவிட்டது. கிரகங்களும் கோள்களும் எனக்கு சாதகமாகவே உள்ளன. கைலாசாவில் மிகப் பெரிய மருத்துவமனை எல்லாம் இல்லை. ஆனால் மிகப் பெரிய மருத்துவ கட்டமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் என நித்தியானந்தா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications