காவிரி மேலாண்மை ஆணையம்.. முழு நேரத் தலைவர் நியமனம்.. இனியாவது சிக்கல்கள் தீருமா?
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ர குமார் ஹல்தரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடைய பல ஆண்டுகளாகவே சிக்கல் இருந்து வருகிறது.
இதிலுள்ள பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில் புதிய செயல் திட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்
இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. 9 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இந்த ஆணையம், மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் தொடர்பாக ஏற்படும் அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த ஆணையத்தின் தலைவராக மசூத் உசேன் செயல்பட்டு வந்தார்.

மத்திய அரசு உத்தரவு
இவர் கடந்த 2019இல் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஏ கே சின்ஹா நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு எஸ்.கே. ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் சவுமித்ர குமார் ஹல்தரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.கே. ஹல்தர்
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே. ஹல்தரை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராகச் செயல்படுவார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது பொறுப்பேற்பார்
எஸ்.கே. ஹல்தர் இப்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ளார். இவர் வரும் நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு இவர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பை ஏற்பார் எனக் கூறப்படுகிறது. முழு நேரத் தலைவர் நியமனத்திற்குப் பிறகாவது நதி நீர் பங்கீட்டில் இருக்கும் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications