எஸ்பிஐ வங்கியின் ஸ்பெஷல் முதலீடு திட்டம்.. 400 நாட்களில் வட்டி மட்டும் இவ்வளவா? ஆஃபர் முடிய போகுது
டெல்லி: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு சேமிப்பு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் கலாஷ் என்ற எஃப்டி (பிக்சட் டெப்பாசிட்) திட்டத்திற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த எஃப்டி திட்டத்தில் 400 நாட்கள் பணத்தை போட்டு வைத்தால் எட்டு சதவீத்திற்கு மேல் வட்டி கிடைக்கும். யாரெல்லாம் இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம், முதிர்வு தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் பல கோடி வாடிக்கையாளர்களுடன் இந்த வங்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்ற வங்கிகளில் முதன்மையாக உள்ள எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு கடனுதவி திட்டங்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறது.

எஸ்பிஐ வங்கி: அதேபோல, எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களும் உள்ளன. நீண்ட காலம் பணத்தை எஃப்டியில் போட்டு வைப்பதன் மூலம் கணிசமான வட்டித் தொகையை பெற முடியும். பொதுவாக இத்தகைய எஃப்டிக்களுக்கு 6 சதவிகித அளவில் தான் வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 400 நாள் அவகாசம் கொண்ட எஃப்டி திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது.
அம்ரித் கலாஷ்: அம்ரித் கலாஷ் (Amrit kalash) என்ற இந்த எஃப்டி திட்டத்தின் கீழ் 400 நாட்கள் பணத்தை போட்டு வைக்கலாம். இந்த அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டத்தில், மிக அதிக வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாக எஸ்பிஐ வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத்தொகை திட்டத்தில் ஓராண்டு கால சேமிப்புக்கு 6.50 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் என்றால் 7 சதவிகித வட்டி கிடைக்கும்.
ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான எஃப்டி திட்டத்தில் 6.80 சதவிகித வட்டியும், 2-3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவிகிதமும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான எஃப்டி திட்டத்திற்கு 6.75 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டத்தில், வேறு எந்த திட்டத்திற்கும் இல்லாத வகையில் 7.10 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?: இந்த எஃப்டி திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்..அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.2 கோடி ஆகும். இந்த திட்டத்தில் சேருவதற்கான காலக்கெடு வரும் 30 ஆம் தேதி வரைதான் உள்ளது. அதன்பிறகு அதிக வட்டியை அள்ளி தரும் இந்த அமிரித் கலாஷ் எஃப்டி திட்டத்தில் இணைய முடியாது.
இந்த அம்ரித் கலாஷ் திட்டத்தில் வட்டித்தொகையை மாதம் ஒருமுறையுமோ..காலாண்டுக்கு ஒருமுறையோ. ஆண்டுக்கு இருமுறையிலோ பெற்றுக்கொள்ள முடியும். டிடிஎஸ் பிடித்தம் போக வாடிக்கையாளரின் அக்கவுண்டில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும்.
முதலீடு செய்வது எப்படி?: அம்ரித் கலாஷ் திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். அல்லது எஸ்பிஐ வங்கியின் இணையதளத்திலோ..அல்லது யோனோ எஸ்பிஐ-யிலோ பதிவு செய்யலாம்.. நீங்கள் முதலீடு செய்யும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வுத்தொகையாக 10 லட்சத்து 80 ஆயிரத்து 177 ரூபாய் கையில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications