டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூடுதல் அவகாசம் தர முடியாது.. பாஜகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

    டெல்லி: மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்துள்ளார்.

    SC rejects BJPs plea for more time for floor test in Maharashtra

    இந்த அரசுக்கு எதிராக உடனே நம்பிக்கை வாகெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அப்போது பாஜக சார்பில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதற்கு முன்னதாக அவையின் மூத்த உறுப்பினர் இடைக்கால சபாநாயகராக இன்றே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும். நாளை காலை எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நடைபெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    English summary
    SC rejects BJP's plea for more time for floor test. Protem speaker to be appointed and the only agenda is to conduct the floor test
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X