புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா?
Recommended Video

டெல்லி:ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புல்வாமாவில் சில நாட்கள் முன்பு.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அப்போது பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமும், தீவிரவாத அமைப்புகளிடமும் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவோம்" என்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், பிரிவனைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவது என்ற நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை வாத தலைவர்கள், மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சயித் அலி ஷா கிலாணிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பிரிவினை வாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பும், வாகனங்களும் ஞாயிறு மாலைக்குள் திரும்பப் பெற வேண்டும். எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications