Train Fare concession: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை? எப்போது அமலாகிறது?
டெல்லி: கொரோனா காலத்தில் (2020 மார்ச் முதல்) நிறுத்தி வைக்கப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகை, மீண்டும் திரும்ப வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது லட்சக்கணக்கான மூத்தவர்களுக்கு பெரும் நிம்மதியாக அமையும்!
இந்திய ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு லோயர் பர்த், சக்கர நாற்காலி, டிக்கெட் கவுன்ட்டர்களில் தனி வரிசை போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை கொடுக்கப்பட்டு வந்தது.
அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 40% தள்ளுபடியும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் கொடுக்கப்பட்டது.
இந்த கட்டண சலுகை மெயில், எக்ஸ்பிரஸ், ராஜதானி, ஷதாப்தி, துரோணா உள்ளிட்ட பல ரிசர்வ்ட் ரயில்களில் பொருந்தும். ஆன்லைன் (IRCTC) அல்லது கவுன்ட்டரில் "சீனியர் சிட்டிசன்" ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் தானாக கட்டணம் குறையும். பயணத்தின் போது வயது ஆதாரம் (ஆதார், வாக்காளர் அடையாளம், பாஸ்போர்ட் போன்றவை) காட்ட வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது!
ஆனால் கொரோனா காலத்தில் நிலவிய நிதி பற்றாக்குறையால் இந்த கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சலுகை திரும்ப வர வேண்டும் என பல ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அது போல் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பல உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் நிதி அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து கட்டண சலுகையை கொடுப்பது குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனவே இந்த 40 சதவீதம், 50 சதவீத கட்டண சலுகைகள் மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள். இது கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே விஞ்சியது.
இது ஏன் முக்கியம்?
மருத்துவ சிகிச்சை, குடும்ப உறவுகளை சந்திக்க, திருத்தல யாத்திரைக்கு செல்லும் மூத்தவர்களுக்கு பயணச் செலவு பெரும் சுமைதான். இந்த சலுகை திரும்ப வந்தால், அவர்கள் சுதந்திரமாக, குறைந்த செலவில் பயணிக்கலாம் - இது சமூக நலனுக்கும் பெரும் பலம்! இன்னும் அதிகாரப்பூர்வ உறுதி வரவில்லை என்றாலும், வட்டாரங்கள் "விரைவில் நல்ல செய்தி வரும்" என்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications