உறவு கெட்டு போயிடும்.. உடனே ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்க.. வங்கதேசத்திலிருந்து வந்த வார்னிங்.. ஆ
டெல்லி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோரைக் கைது செய்து வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு மெசேஜ் வந்துள்ளது. வங்கதேசத்தில் நான்கு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் நீண்ட தலைவர் ஷேக் ஹசீனா தற்போது ராஜினாமா செய்துள்ளார். நாட்டை விட்டும் வெளியேறி உள்ளார். ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறை மற்றும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்கதேசத்தில் இராணுவம் இடைக்கால அரசாங்கம் அமைப்பதாக அறிவித்து உள்ளது. ஹசீனாவின் வீழ்ச்சியானது.. அந்த நாட்டிற்கு சிக்கல் என்பதை விட.. இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஆகும்.. இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து மேலும் ஒரு நாடு வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோரைக் கைது செய்து வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு மெசேஜ் வந்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) தலைவர் AM Mahbub Uddin Khokon, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கோகோன், வங்கதேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் மரணங்களுக்கு ஹசீனா பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவுடன் நேர்மறையான உறவைப் பேணுவது முக்கியம்.
இந்தியா - வங்கதேச உறவு முக்கியம். இந்த உறவு உடையாமல் இருக்க ஹசீனாவை இந்தியாவில் இருந்து உடனே வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும். ஷேக் ஹசீனா பங்களாதேஷில் பலரைக் கொன்றுள்ளார். இதற்கெல்லாம் அவர் பொறுப்பேற்க வேண்டும். அவரை இந்தியா திரும்பி அனுப்பவில்லை என்றால் நம் உறவு கெடும் வாய்ப்புகள் உள்ளன.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) இணைச் செயலாளராகவும் பணியாற்றும் கோகோன் அந்நாட்டின் வலிமையான தலைவர்களில் ஒருவர். அப்படி இருக்க அவரே இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்கு சிக்கல்: வங்கதேசம் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. சீனா அருகிலேயே இருந்தாலும், அமெரிக்கா பல கோடிகளை முதலீடு செய்ய தயாராக இருந்தாலும் கூட அவர்களை அரசியலை வங்கதேசம் உள்ளே விட்டது இல்லை. காரணம் ஹசீனா இந்தியாவுடன் வைத்து இருக்கும் நெருக்கம். இந்தியாவின் ஆட்சியாளர்களுடன் அவர் தொடர்ந்து கடைபிடிக்கும் நெருக்கம் இந்தியாவிற்குஉறுதுணையாக இருந்தது.
ஏனென்றால் பாகிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதேபோல் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு இல்லை. அதோடு இலங்கை சீனாவிற்கு நெருக்கம் ஆகிவிட்டது. நேபாளம் இந்தியாவை எதிரியாக பார்க்கிறது. பூடான் அவ்வப்போது இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை, நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.
இப்படி இருக்க வங்கதேசத்தின் நட்பு இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. இதன் காரணமாகவே வங்கதேசத்தில் இந்தியாவின் பராம்பரிய ஜவுளி துறை கூட வளர்ச்சி அடைய இந்தியா இடம் கொடுத்தது. இரண்டு நாட்டு உறவு வலிமை அடைய.. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிஸ்னஸ் காரணமாகவும் இருந்தது.
உறவு காலி: ஆனால் தற்போது இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்கதேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்கதேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்கதேச ஆட்சியை கவிழ்த்து உள்ளது.
இதை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications