பாலியல் புகார்: தப்புதான், நான் விசாரித்திருக்க கூடாது! 45 வருட பணி வீணா போச்சு! ரஞ்சன் கோகாய் வேதனை
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுயசரிதை விழாவில் பேசியிருக்கிறார்
டெல்லி: "என் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானே விசாரித்திருக்க கூடாது.. அது முறையான விசாரணையும் இல்லை.. என்னுடைய 45 ஆண்டுகால பணி வீணாகிவிட்டது.. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை" என்று சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து ரஞ்சன் இவ்வாறு தன் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நடந்த வழக்கு என்ன?
அந்த பெண் டெல்லியை சேர்ந்தவர்.. 35 வயதாகிறது.. ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தலித் என கூறப்படுகிறது.. திருமணமாகி குழந்தை உள்ளது.. அப்போது சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பணி வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரம் தெரியவரவும் அதற்காக முயற்சித்து, அந்த பணியிலும் சேர்ந்துவிடுகிறார் அந்த பெண்.
சுப்ரீம் கோர்ட் லைப்ரரியில் நூலகத்தில் தட்டச்சு செய்வது மற்றும் ஆவணப் பராமரிப்பு, நீதிபதிகளுக்கு தேவையான நூல்களை எடுத்துக் கொடுப்பது போன்றவைதான் இவருக்கான பணி. இதையடுத்து நீதிபதிகளின் அவைகளில் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கிறது.

பெண்
2016 அக்டோபர் மாதம், நீதிபதி ரஞ்சன் கோகோயின் அவையில் பணியமர்த்தப்படுகிறார்... அப்போது முதல் ரஞ்சன் கோகாய் பார்வை இந்த பெண்ணின் மீது திரும்பியதாகவும், அது பாலியல் தொல்லையாக அதிகரித்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண்ணே பகீரை கிளப்பினார்.. சுப்ரீம்கோரட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் கூறியது, 2019-ல் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

புகார்கள்
இறுதியில் ரஞ்சன்கோகாய் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பானது.. ஆனால் இந்த தீர்ப்பு வரும்வரை ரஞ்சன்கோகாய் மீதான பல்வேறு அவதூறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வேண்டுமென்றே பரப்பப்பட்டன. இந்நிலையில்தான், தான் சந்தித்த இந்த போலியான பாலியல் குற்றச்சாட்டை, தான் எழுதும் சுயசரிதையில் ரஞ்சன் கோகாய் பதிவு செய்துள்ளார்..
இறுதியில் ரஞ்சன்கோகாய் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பானது.. ஆனால் இந்த தீர்ப்பு வரும்வரை ரஞ்சன்கோகாய் மீதான பல்வேறு அவதூறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் தவேண்டுமென்றே பரப்பப்பட்டன. இந்நிலையில்தான், தான் சந்தித்த இந்த போலியான பாலியல் குற்றச்சாட்டை, தான் எழுதும் சுயசரிதையில் ரஞ்சன் கோகாய் பதிவு செய்துள்ளார்..

புத்தகம்
அந்த சுயசரிதை புத்தகத்துக்கு ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ் (Justice for the Judge) என்று பெயர்.. இந்த சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது.. அந்த புத்தகத்தில்தான் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு, அயோத்தி தீர்ப்பு, தனக்கு கிடைத்த எம்பி பதவி என ஏகப்பட்ட விஷயங்களை அதில் வெளிப்படையாகவே எழுதி உள்ளார்..

3 நீதிபதிகள்
இந்த சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், ரஞ்சன் கோகாய் பேசியபோது, "சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் ஊழியர் ஒருவர் எனக்கு எதிராக கடந்த 2019-ல் பாலியல் புகார் சொன்னார்.. அந்த வழக்கை சுப்ரீம்கோர்ட் தாமாகவே விசாரணைக்கு எடுத்து கொண்டது.. இதை விசாரிக்க திடீரென 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.. அதில் நான் இடம்பெற்றிருக்க கூடாது.. அது முறையான விசாரணையும் இல்லை.. ஆனால் அந்த அமர்வில் நானும் இருந்தேன்.. அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் என்னால் கையெழுத்து போட முடியவில்லை.. மறுத்துவிட்டேன்.. விசாரணையின் முடிவில் யாருக்கும் பாதகமில்லாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றம்
இதனால், நீதித்துறையில் என்னுடைய 45 வருடங்கள் ஆற்றிய சேவை பாதிக்கப்பட்டுவிட்டது.. என்னைப் பொறுத்தவரை தலைமை நீதிபதியாக நான் இருந்தபோது, என் செயல்பாட்டுக்கு ஆபத்துக்கு விளைவிக்கவே என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவே நினைக்கிறேன்.. நாம் தவறு செய்யக்கூடியவர்கள்.. அதை ஏற்று கொள்வதில் ஒன்றும் பாதிப்பு கிடையாது.. இந்த வழக்கின் விசாரணை ஒருந சனிக்கிழமை நடந்தது.. ஆனால் விசாரணை கொஞ்ச நேரம்தான் நடந்தது.. இவ்வளவும் என்னுடைய பணியை முடக்குவதற்காக, எனக்கு தெரிந்த ஒருசிலரின் முயற்சிதான் இது.. அவர்கள்தான் எனக்கு எதிராக பாலியல் புகார் சொன்னவர்கள்.. இந்த விவரங்களை எல்லாம் விசாரணையில் தெளிவுபடுத்தினேன்" என்றார்.

எம்பி ரஞ்சன் கோகாய்
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர்.. அதுமட்டுமல்ல, தீர்ப்பு சபரிமலை தீர்ப்பு மறுஆய்வுமனு, ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, ரஃபேல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கிய பெருமைக்குரியவர்.. சுப்ரீம்கோரட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் இப்போது மாநிலங்களவை எம்பியாக கோகய் உள்ளார்.












Click it and Unblock the Notifications