மத்திய அரசுக்கு முதிர்ச்சி வேண்டும்... சரத்பவார் அட்வைஸ்!
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சரத் பவார், மத்திய அரசு இதில் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த போராட்டம் தொடர்பாக டிசம்பர் 9 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கிட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவிலை.இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கூறியதாவது:-
பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் பெருமளவில் அரிசி மற்றும் கோதுமையை நாட்டுக்கு வழங்குகிறார்கள். 13 நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. அதில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் பெரும் பங்கு வகித்து வருகிறார்கள்.இந்த மாநிலங்களின் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அரசாங்கம் அறிவாற்றலை செயல்படுத்தி நடந்து கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை.இந்த போராட்டம் டெல்லியில் மட்டுமே நின்றுவிடாது.
நாடு முழுவதும் அனைவரும் விரைவில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பார்கள். எனவே, அரசாங்கம் முதிர்ச்சியுடன் செயல்படும் நேரம் இது.
இவ்வாறு சரத் பவார் கூறினார். மேலும், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக டிசம்பர் 9 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளதாக சரத் பவார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications