குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள்.. சசிதரூர் வைத்த முக்கியமான கோரிக்கை
டெல்லி: குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு நல்லதொரு பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.
உலகிற்கே தேவையான பெட்ரோல், கேஸ், டீசல் உள்ளிட்டவற்றை தரும் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்வது வளைகுடா நாடுகள் தான். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குவைத் முக்கியமான பங்குவகிக்கிறது.. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடாக குவைத் விளங்குகிறத.

குவைத்தில் ஏராளமான எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் பல இருக்கின்றன. எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள் குவைத்தில் செயல்படுகின்றன.. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் இந்தியர்கள் ஆவார். குறிப்பாக சொல்வது என்றால், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் குவைத்தில் இருக்கிறார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் குவைத்தில் பணியாற்றுகிறார்கள்.. கேரளாவின் குறிப்பிட்ட சதவீதம் மக்கள் குவைத்தில் பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார். அதாவது சுமார் 10 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள்.. இதுதவிர அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிலும் கணிசமானோர் இந்தியர்கள் ஆவார். குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி உள்ளனர்.. குடும்பமாக பலர் தங்கி உள்ள நிலையில், குடும்பத்தினரை இந்தியாவிலேயே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர். அப்படி வசிப்பவர்களுக்கு தொழிலாளர் முகாம்கள் அதிக அளவில் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளன.
குவைத் அடுக்கமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த விபத்தை தொடர்ந்து திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். இதன்படி குவைத் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு நல்லதொரு பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறதியுள்ளார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications