அஜித் பவாருக்கு எதிரான ரூ.70,000 கோடி ஊழல் வழக்கை மூட முயற்சி.. உச்சநீதிமன்றம் செல்கிறது சிவசேனா
டெல்லி: ரூ70000 கோடி விவசாய பாசன ஊழல் வழக்கில் அஜித் பவாருக்கு எதிராக மகாராஸ்டிரா மாநில லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கை முடித்து வைக்க முயற்சி நடப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா முறையிட திட்டமிட்டுள்ளது
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் முறையிட்டுள்ளன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அதில் ரூ70000 கோடி நீர் பாசன ஊழல் வழக்கில் அஜித் பவாருக்கு எதிராக மகாராஸ்டிரா மாநில லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கப்பட்டள்ளதாக தகவல்கள் பரவியது.
இதனை மகாராஷ்டிரா லஞ்சஒழிப்புத்துறை அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இது முற்றிலும் வதந்தி என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் அஜித் பவாருக்கு எதிரான நீர்பாசன ஊழல் வழக்கை முடித்து வைக்க முயற்சி நடப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா முறையிட திட்டமிட்டுள்ளன,. சிவசேனா உடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்து முறையிடுகின்றன.
இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை ஃபட்னாவிஸ் அரசு எந்த விதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும்; எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications