“கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை!” முதல் முறையாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, நடைபெற இருந்த தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் பங்கேற்ற மந்தனா, தனது அணுகுமுறை குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, "கிரிக்கெட் மீதான அன்பு அளப்பரியது. என் வாழ்வில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை. இந்திய ஜெர்சியை அணியும் போது, வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்காது. நாட்டிற்காக, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, போட்டியை வெல்வதே மனதில் இருக்கும்.
ஜெர்சியை அணியும்போதே உங்கள் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, களத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கோடி மக்களில் நீங்களும் ஒருவர். இந்த எண்ணமே தீவிர கவனம் செலுத்தி, செயல்படப் போதுமானது" என்று கூறியுள்ளார்.
அதேபோல டீமுக்குள் கருத்து வேறுபாடுகள் வருமா என்பது குறித்த கேள்விக்கு, "நான் இதை பிரச்சனையாகக் கருதுவதில்லை. ஏனெனில், எல்லோரும் நாட்டிற்காக வெல்ல விரும்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப் பார்வை உண்டு. உண்மையில், இந்த விவாதங்கள் இல்லாமல் களத்தில் வெல்ல முடியாது. கருத்து வேறுபாடுகள் இல்லை என்றால், வெற்றிக்கு ஆர்வம் இல்லை என்றே பொருள். இதுபோன்ற விவாதங்கள் எங்களுக்குள் நடப்பது வழக்கம்தான்" என பதிலளித்துள்ளார்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம நவ. 23 அன்று நடக்க இருந்தது. ஆனால், தந்தை ஸ்ரீனிவாஸுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7 அன்று தனது திருமணத்தை ரத்து செய்வதாக மந்தனா மற்றும் முச்சல் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட்டாக அறிவித்தனர்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் தனது திருமணத்தை ரத்து செய்த பிறகு, மந்தனா பொது வெளியில் தோன்றியது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 21 முதல் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 சர்வதேசத் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 2 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் இருதரப்புத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications