இந்தியாவில் சூரிய கிரகணம் முடிந்தது.. வானில் நெருப்பு வளையம் போலிருந்த அற்புத நிகழ்வு
டெல்லி: இந்தியாவில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கிய நிலையில் சில இடங்களில் பிற்பகல் 3.30 மணிக்கு முடிகிறது.
Recommended Video
கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் காலை 9.58க்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிந்தது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது.

இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரிந்தது. இது இந்த ஆண்டின் முதல் கிரகணம் ஆகும்.

அடுத்த கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இது இந்த ஆண்டின் கடைசி கிரகணமாகும். அது போல் இந்தியாவில் தென்படும் கடைசி கிரகணமும் இதுவாகும். இத்துடன் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்தியாவில் கிரகணம் தெரியும்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிக பிரகாசமாக இருக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் காணக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளில் காலை 9.15 மணிக்கு கிரகணம் தொடங்கிய நிலையில் இந்தியாவில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணிக்கு சூரிய கிரகணம் முதலில் தென்பட்டது. இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகாரில் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications